பிரதான செய்திகள் விளையாட்டு

மன்செஸ்டர் சிற்றியை விட்டு டேவிட் சில்வா விலகுகின்றார்


இங்கிலாந்து பிறீமியர் லீக் சம்பியனான மன்செஸ்டர் சிற்றி கழகத்தினை விட்டு 2019-2020 பருவகாலத்துடன் விலகவுள்ளதாக அக்கழகத்தின் மத்தியகளவீரரான டேவிட் சில்வா தெரிவித்துள்ளார். ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவிலிருந்து 2010ஆம் ஆண்டு மன்செஸ்டர் சிற்றியில் இணைந்திருந்தார்.

33 வயதான டேவிட் சில்வா, மன்செஸ்டர் சிற்றிக்காக 395 போட்டிகளில் இதுவரை விளையாடி, நான்கு பிறீமியர் லீக் பட்டங்களையும், இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத்தை இரண்டு தடவைகளும் , இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத்தை இரண்டு தடவைகளும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

#மன்செஸ்டர் சிற்றி #டேவிட் சில்வா #விலகுகின்றார் #David Silva

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.