மரண தண்டனையை நிறைவேற்றுவது சம்பந்தமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜே.டப்ளியூ. தென்னகோன் கூறினார்.
நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (26.06.19) கூறியுள்ளார். எவ்வாறாயினும் இது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை நிறைவேற்றுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத் தயார் நிலையில் இருப்பதாகவும் ஆணையாளர் ஜே.டப்ளியூ. தென்னகோன் கூறினார். #மரணதண்டனை #சிறைச்சாலைகள்திணைக்களம் #போதைப்பொருள் #குற்றவாளிகள்
Spread the love
Add Comment