இலங்கை பிரதான செய்திகள்

முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…

கல்முனையில் தனியாக தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாகுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனாலும் அவர்கள் அதற்குத் தடையை ஏற்படுத்தி வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள, அவரது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதேச செயலகத்திற்கு தடையை ஏற்படுத்தும், அவர்களது செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது முஸ்லிம் மக்களுக்கோ நல்லதல்ல. உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்களிடைய பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை தமிழர்கள் மாத்திரம் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க முடியாது எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக கல்முனைப் பிரச்சினைப் பொறுத்தவரையில் இந்த அரசின் காலத்தில்  வந்த பிரச்சினை அல்ல. இது மிக நிண்ட காலமாக குறிப்பாக பிரேமதாச காலம் தொட்டு இருந்த வருகின்ற பிரச்சினையே. ஆயினும் இதை எதிர்த்து நிற்கக் கூடிய முஸ்லிம் சமூகத்திற்கு இதனால் எந்தப் பாதிப்பும் நேரடியாக வரப்போவதில்லை. அவ்வாறானன பாதிப்புக்கள் அவர்களுக்கு எதுவுமே கிடையாது.

இருந்தாலும் அந்தப் பகுதிகளிலே ஒரு தமிழ்ப் பிரதேச செயலகம் ஒன்று உருவாக்கப்பட்டு செயல்ப்படுவதன் மூலம் அங்கு தங்களுடைய இருப்பை பரவலாக்கி கொள்வதற்கு அல்லது ஆக்கிரமித்துக் கொள்வதற்கு தடைகள் ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் மட்டுமே அவர்கள் இதனை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தான் தான் இதனைக் கருதுவதாக குறிப்பிட்டள்ளார்.

“உண்மையிலையே சிறுபான்மையாகிய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். வெறுமனே தமிழர்கள்  மாத்திரம் அந்தப் புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கொண்டிருக்க முடியாது. உதாரணத்திற்கு பார்த்தீர்களானால் கிழக்கில் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் காங்கிரஸ் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்கு நாங்கள் ஒத்துக் கொண்டோம்.”

“கிழக்கு மாகாண சபையில் எங்களிடம் 11 அங்கத்தவர்கள் இருந்த நிலையில் அவர்களிடம் 7 அங்கத்தவர்கள் இருந்த போதிலும் கூட நாங்கள் அந்த நல்லுறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கிழக்கு மாகாணத்தையே விட்டுக் கொடுத்தோம். ஆனால் இந்த ஒரு சிறிய பிரதேச செயலகப் பகுதியை அதாவது கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகப் பகுதியை விடுவிதற்கு அல்லது உருவாக்குவதற்கு அவர்கள் எவ்வளவோ தடைகளை ஏற்படுத்துகின்றார்கள்.

“இதுவொரு நல்ல விசயம் அல்ல. அவர்கள் தரக் கூடிய தடைகள் என்பது இன்றைக்கு பாரதூரமான நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கின்றது. இன்று பௌத்த துறவிகள் ஞானசார தேரர் போன்றவர்கள் இன்று அதிலே தலை வைத்து இதை ஒரு பூதாகாரமான பிரச்சினையாக ஆக்குவதற்கான அடித்தளங்கள் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றது” என  பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்  தெரிவித்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • நல்லுறவை வைத்துக் கொள்ள தமிழர்கள் முஸ்லிம்களுக்கு கிழக்கு மாகாணத்தை, மாகாண சபையை மற்றும் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தார்கள்.

    அதிகாரம் வந்தவுடன் முஸ்லிம்களை கூடிய அளவில் வேலைக்கு அமர்த்தினார்கள், பெரிய அளவில் கொலை செய்தார்கள், மத மாற்றத்தை அதிகரித்தார்கள், நில அபகரிப்பை கூட்டினார்கள் மற்றும் கல்முனையில் தனியாக தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாகுவதை எதிர்க்கின்றார்கள்.

    இவற்றை எல்லாம் மாற்றி அமைக்க முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இடையே பரஸ்பர புரிந்துணர்வு வேண்டும். இதற்கான முயற்சிகளை சித்தார்த்தன் மற்றவர்களுடன் சேர்ந்து எடுக்க வேண்டும். செய்வாரா?