இலங்கை பிரதான செய்திகள்

கோத்தாபயவுக்கு எதிராக, அமெரிக்க நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள்..


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா மதநில மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் 10 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.  08 தமிழர்கள் மற்றும் 02 சிங்களவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளதுடன், அதில் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005-2015ம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலேயே கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கோத்தாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜை என்பதால் அமெரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதமும் கோத்தாபய ராஜபக்ஸ வுக்கு எதிராக 03 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருந்தமை கூறத்தக்கது. #கோத்தாபயராஜபக்ஸ #அமெரிக்கா #கலிபோர்னியா

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.