இலங்கை பிரதான செய்திகள்

12 ஏக்கர் காட்டை அழித்து, பாண்டியன்குளத்தில் விவசாயம் செய்கிறாரா சாந்தி சிறிஸ்கந்தராசா?


காடழிப்பு, சுற்றுசூழல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி செல்லும் மக்கள் பிரதிநிதிகளால் அதிகளவு காடழிப்பு இடம்பெறுகின்றது என்பதற்கு இந்த பகுதி சான்றாக அமைவதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

சொந்த மண்ணிலேயே இவ்வாறு காட்டினை அழித்து சொத்தாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசாவின் செயற்பாடு தொடர்பில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் இவ்வாறு 12 ஏக்கர் வரையான காடு அழிக்கப்பட்டு நெற்செய்கை மெற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அதிகாரிகளை அச்சுறுத்தி குறித்த காணி வசப்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரை வனவளபாதுகாப்பு பிரிவினரோ, நீர்பாசன திணைக்களமோ அல்லது மாவட்ட அரச அதிபரோ நடவடிக்கை மேற்கொள்ளமை ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை பாலியாற்றின் எல்லை பகுதியையும் வேலியிட்டு ஆக்கிரமித்து விவிசாயம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறித்த பாலி ஆற்றிலிருந்து நீர் இறைக்கும் இயந்திரத்தின் மூலம் நீர் வயலுக்கு பாய்ச்சப்படுகின்றது.

மக்களின் வாக்குகளால் தெரிவான அரசியல்வாதிகள் சுற்று சூழல் பாதுகாப்பு தொடரப்பில் மக்களிற்கு விழிப்புனர்வு ஊட்டவேண்டிய நிலையிலு்ம, பாதுகாக்க வேண்டியகடப்பட்டிலும் உள்ள நிலையில், அதிகளவான காடுகளை அழித்து தமது சந்ததிக்கு சொத்தாக்கிக் கொள்ள நினைப்பது தொடர்பிலும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் மௌனம் காப்பது குறித்தும், கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. #சாந்திசிறிஸ்காந்தராசா #தமிழ்தேசியகூட்டமைப்பு, #மாந்தைகிழக்குபிரதேசசெயலர்பிரிவு#பாண்டியன்குளம் #வனவளபாதுகாப்புபிரிவு#நீர்பாசன திணைக்களம்

இந்தக் குற்றச்சாட்டகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா பதிலளித்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும்.

 

செய்தி – படங்கள் – yathu bashkaran

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.