பிரதான செய்திகள் விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி – அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் தக்கவைத்துக் கொண்டுள்ளது

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. லீட்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்றது. இதனையடுத்து 228 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட்களை இழந்து வெற்றியீட்டியுள்டளது

இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்திலுள்ள பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதேவேளை, நியூஸிலாந்து அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது  #ஐ.சி.சி. #ஆப்கானிஸ்தான் #வெற்றி #அரையிறுதி #பாகிஸ்தான்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.