பிரதான செய்திகள் விளையாட்டு

ஹட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதலாவது நியூசிலாந்து வீரராக போல்ட் சாதனை

ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். நேற்றையதினம் இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலகக்கிண்ணப் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை டிரென்ட் போல்ட் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் போல்ட் 10 ஓவர்கள் பந்து வீசி 51 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியிருந்தார். அந்தவகையில் ஒட்டுமொத்த உலகக்கிண்ண வரலாற்றில் டிரென்ட் போல்டையும் சேர்த்து 11 ஹட்ரிக் விக்கெட் சாதனை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஹட்ரிக் #நியூசிலாந்து  #போல்ட்  #சாதனை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.