சோபா ஒப்பந்தத்தை நிறைவேற்றி அமெரிக்காவின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் நோக்கிலே பிரதமர் ரணில் விக்ரசிங்க செயற்படுவதாக தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஜனாதிபதியும் பிரதமரும் மீண்டும் ஆட்சி செய்தால் மக்களுக்குத்தான் மரண தண்டனை என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் சவால் விடுக்கும் செயற்பாடுகளை தமது அரசியல் தேவைகளுக்காக முன்னெடுப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பிற்கு மத்தியில் சோபா அமெரிக்கா ஒப்பந்தங்கள் ஒருபோதும் நிறைவேற்ற இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
மரண தண்டனை தற்போது அரசியல் பேசுபொருளாக காணப்படுகின்றது. இதன் காரணமாக ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் தற்போதும் நீடிக்கும் கருத்து வேற்றுமையே அனைத்து பிரச்சினைக்கும் பிரதான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மரண தண்டனை வழங்குவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு முரணானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை பொருத்தமற்றது என்றும் தற்போதைய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் அனைத்திற்கும் தேர்தலின் ஊடாகவே தீர்வு கிடைக்கப் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். #மைத்திரி #ரணில்ஆட்சி #மரண தண்டனை #ரோஹித அபேகுணவர்தன
Spread the love
Add Comment