Home உலகம் விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

by admin

விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் லண்டனிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. நைரோபியிலிருந்து வந்த கென்ய நாட்டு பயணிகள் விமானம் ஒன்று ஹீத்துரோ விமான நிலையத்தில் இறங்குவதற்காக சக்கரங்களை கீழே இறக்கியபோது, குறித்த நபர் கீழே விழுந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. குறித்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டப்பகுதிக்கு அண்மையில் உள்ள மாடியில் நின்ற நபர் ஒருவர் சத்தம் கேட்டு கீழே பார்த்தபோது, அங்கு சடலத்தை கண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ள மெட் காவல்துறை, இந்த நபரின் இறப்பு சந்தேகத்திற்குரியதாக தோன்றவில்லை என தெரிவித்துள்ளது. #விமானத்தில்  #ஒளிந்திருந்து #பயணம்  #சடலம் #ஹீத்துரோ

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More