இந்தியா பிரதான செய்திகள்

மும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து 12 பேர் பலி..


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெயிளாகியுள்ளது

இந்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றதுடன் குறிப்பாக வீதிகள் மற்றும் புகையிரத தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதனையடுத்து அங்கு அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளில் மேலும் சிக்கியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகளில மழை தொடர்பான விபத்துக்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர் எனத்ட தெரிவித்துள்ள அதிகாரிகள் பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என  அறிவுறுத்தி உள்ளனர். #மகாராஷ்டிரா #தொடர்மழை #மும்பை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.