Home சினிமா பிகில் படத்தில் விஜய்யுடன் நடனமாடும் ஷாருக்கான் :

பிகில் படத்தில் விஜய்யுடன் நடனமாடும் ஷாருக்கான் :

by admin


அட்லி இயக்கும்  பிகில் திரைப்படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாட ஷாருக் கான் ஒப்புக்கொண்டுள்ளார்.  அட்லி இயக்கத்தில் 3ஆவது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டி என்பன வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர். இப்படத்தில், இந்துஜா, சத்யராஜ், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், பிகில் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகர் ஷாருக்கான் ஒப்புக் கொண்டுள்ளார்.  #பிகில் #விஜய் #ஷாருக்கான் #அட்லி  #நயன்தாரா  #ஏ.ஆர்.ரகுமான்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More