இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு புதூரில் காவல்துறையினரின் கைத்துப்பாக்கி பறிப்பு- சுற்றிவளைப்பில் 4 பேர் காயம் – 9 பேர் கைது

மட்டக்களப்பு புதூர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து காவல்துறையினரின் கைதுப்பாக்கியை ஒருவர் பறித்துச் சென்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (27) பகல் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினருக்கும் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

மட்டு தலைமையக காவல்துறைப் பிரிவின் கீழ் உள்ள புதூர் திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் சம்பவமினமான இன்று வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீதி போக்குவரத்து காவல்துறையினர் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இருவர் தலைகவசம் இன்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காவல்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டனர்.

இந்நிலையில் மோட்டர் சைக்கிளை செலுத்தி வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்ற போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர்.

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் முறுகல் ஏற்பட்ட நிலையில் காவல்துறை உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைதுப்பாக்கி ஒன்றை இனந்தெரியாத ஒருவர் அபகரித்து தப்பிச் சென்றார்.

இதனை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன்சம்பவத்தில் காயமடைந்த 2 காவல்துறையினர் 4 பேரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். சம்பவ இடத்திற்கு செனடற காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இச் சம்பவம் தொடர்பாக பெண்கள் உட்பட 9 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதுடன்புதூர் மற்றும் வவுணதீவு பகுதிகளில் மேலதிகமாக இராணுவத்தினர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் ,விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது #மட்டக்களப்பு #புதூரில் #கைத்துப்பாக்கி #பறிப்பு   #கைது # சுற்றிவளைப்பு


பாறுக் ஷிஹான்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.