கோவா மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது எனத் தெரிவித்த அவர் எதிர்வரும் வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டம் அமுலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். #கோவா #திருமணத்துக்கு #எச்.ஐ.வி. #பரிசோதனை #சட்டம்
Spread the love
Add Comment