உலகம் பிரதான செய்திகள்

பப்புவா நியூகினியாவில் பழங்குடியினரிடையே மோதல் – 24 பேர் உயிரிழப்பு

பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியாவில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே நிகழ்ந்த மோதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . பப்புவா நியூகினியாவில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்ற நிலையில், அங்கு இரு பழங்குடி இன மக்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

3 நாட்களாக நடந்து வந்த இந்த மோதலில் ஒருவரை ஒருவர் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டதில் 2 கர்ப்பிணி பெண்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த மோதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டிப்பாக நீதி வழங்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் ஜேம்ஸ் மாரபி உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #papua new guinea  #பப்புவா நியூகினியா  #பழங்குடியினரிடையே #மோதல்  #உயிரிழப்பு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.