உலகம்

சிரியாவில் கண்ணி வெடி வெடித்ததில் ஏழு குழந்தைகள் பலி


சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி வெடித்ததில் ஏழு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருவதனை சாதகமாக பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து சில மாகாணங்களை தம்வசம் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் கடந்த வருடம் உள்நாட்டு படையினர் அந்த நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்த போது அவர்கள் புதைத்து விட்டு சென்ற கண்ணி வெடிகளில் சிக்கி பலர் தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில் அங்கு நேற்று முன்தினம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற கண்ணி வெடி தாக்குதலில் 7 குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சிரியா  #கண்ணி வெடி #குழந்தைகள் #பலி #ஐ.எஸ்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.