இலங்கை பிரதான செய்திகள்

30 வருடங்களாக மகனை தேடிய வியாழம்மா, காணாமலே உயிர் நீத்தார்!


முப்பது வருடங்களாக தனது மகனை தேடியலைந்த தாய் ஒருவர் தனது மகனை காணாத நிலையில் உயிர் நீத்த சம்பவம் கேப்பாபுலவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே இவ்வாறு முதுமை காரணமாக உயிரிழந்தார்.

இவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 30 வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மனித உரிமை ஆணைக்குழுக்களில் தனது மகனைத் தேடி வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார்.  எனினும், தனது மகனைக் காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளார். கேப்பாப்பிலவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் வியாழம்மாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. #கேப்பாபுலவு #காணாமல்ஆக்கப்பட்டவர்கள், #மனிதஉரிமைஆணைக்குழு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap