இலங்கை பிரதான செய்திகள்

பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்-   ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்

கல்முனை   அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாக சீர்கேட்டினால் பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு கல்முனை காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை(15) மதியம் குறித்த வைத்தியசாலையின் பின்வாசலில் நோயாளிகளான தமது உறவுகளை பார்வையிட வந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்துள்ளனர். வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்படும் பாஸ் நடைமுறை ஊடாக பொதுமக்களை பார்வையாளராக அனுமதித்த வண்ணம் இருந்தனர்.

எனினும் சுமார் 1 மணித்தியாலமாக கைக்குழந்தைகளுடன் வெயிலில் இருந்த தாய்மார்கள் சிறுவர்கள் பெரியோர்கள் பொறுமை இழந்து பாதுகாப்பு தரப்பினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்களுடன் பாதுகாப்பு தரப்பினர் தூசண வார்த்தைகளினால் ஏசி கலைந்து செல்லுமாறு கூறினர்.

இந்த வைத்தியசாலைக்கு நோயாளிகளை பார்வையிடுவதற்காக வெளியிடங்களில் இருந்து குறிப்பாக பொத்துவில் அக்கரைப்பற்று பாலமுனை நிந்தவூர் அட்டாளை சேனை உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கால்கடுக்க கடுக்க வெயிலில் நின்றமை தொடர்பாக அவ்விடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று செய்திகளை சேகரித்தனர். அவ்வேளை பாதுகாப்பு தரப்பினர் ஊடகவியலாளர்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தல் விடுத்தனர்.

இதே வேளை கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமையும்  இழுபறி ஏற்பட்டு  பதற்ற நிலை உருவானது.
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை(14) மாலை  பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இப்பதற்றம் ஏற்பட்டது.

இந்த அனுமதி விடயத்தில் நடைமுறைக்கு பொறுத்தமான பாஸ் நடைமுறை முறையாக அமுல்படுத்தாமை காரணமாகவும் வைத்தியசாலைக்கு வரும் பொதுமக்கள் காத்திருப்பதற்கு ஒரு நிழல் குடை அமைக்கப்படாமையாலும் வெயிலில் நின்ற  பொதுமக்கள் முக்கிய வீதி ஒன்றை இடைமறிக்கும் வகையில்  உரிமைகள் மீறப்படுவதாக கூறி குழுமி நின்றனர்.

இதனால் அவ்வீதியால் பயணம் செய்தவர்கள் பெரும் சிரமங்களை மேற்கொண்ட நிலையில் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக பொதுமக்களில் சிலர் அவ்வழியே பயணித்த  ஊடகவியலாளர்களிக் உதவியை நாடினர்.இதன் போது குறித்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நாடிய ஊடகவியலாளர்கள் குழு இவ்விடயத்தை சுமூகமான தீர்வை கண்டு மக்களின் அடிப்படை உரிமைக்கு மதிப்பளிக்குமாறு அவ்விடத்தில்  கேட்டனர்.

இதனை கேட்ட பாதுகாப்பு உறுப்பினர்கள் அமைதி காத்தனர் .இதனால்  இந்த விடயத்தை கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்  ஏ.எல்.எப்.றஹ்மானை சந்தித்து கதைக்க வேண்டும் என   ஊடகவியலாளர்கள்  கூறினர்.இதனால் குறித்த ஊடகவியலாளர்களை  வைத்தியசாலைக்குள் அனுமதித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்    கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை   வைத்திய அத்தியட்சகர் இருக்கின்ற அறையை காட்ட அழைத்து சென்று பின்னர் அவர் அங்கில்லை  என்றும்  படிக்க கொழும்பிற்கு  சென்று விட்டதாக கூறினர்.

இதனை அடுத்து ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு தரப்பினரை அணுகி இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு பொதுமக்களுக்கு  எவ்வித இடையூறும் இன்றி நோயாளர்களை சென்று பார்வையிட அனுமதிக்குமாறு பாதுகாப்பு தரப்பை கேட்டு சென்றனர்.இந்நிலையில் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை கல்முனை மருதமுனை தூர இடங்களில் இருந்து கால்கடுக்க வெயிலில் காத்திருந்த மக்கள் அனைவரும் குறித்த பின்வாசல் நுழைவாயிலில் இருந்து அனைவரும் வைத்தியசாலைக்குள் வந்துவிட்டனர்.

அதுவரைக்கும் மேற்குறித்த இடைமறிக்கப்பட்ட  வீதி பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும் போக்குவரத்துக்கு தொடர்ந்து தடையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.எனவே இந்த பாஸ் நடைமுறையில் உள்ள  தடைகளை ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகளை  குறிப்பாக அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.தொடர்ந்து பொதுமக்களின் அடிப்படை உரிமையை மறுத்து   மனிதபிமானம் இன்றி   இழுபறி நிலை தொடராமல் இருக்க கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை   வைத்திய அத்தியட்சகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

அத்துடன்   இருந்த  விடயத்திற்கு தீர்வு காண சென்ற ஊடகவியலாளர்கள் குழுவிடம்  பாதுகாப்பு தரப்பினர் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை   வைத்திய அத்தியட்சகர்  வைத்தியசாலையில் இல்லை என்று கூறினர்.இதனால் உரிய தீர்வு பெறப்பவில்லை என்பதும்  சுட்டிக்காட்டத்தக்கது.எனவே  கல்முனை அஸ்ரப் வைத்தியசாலை  நிருவாகம் சம்மந்தப்பட்ட தரப்புடன் பேசி உரிய தீர்வினை பெற முயற்சிக்க வேண்டும். அதுவரை நாம் விழித்திருப்போம்.இந்த பாஸ் நடைமுறைக்கு  மக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்களது கருத்துக்களில் இருந்து அறிய முடிந்தது #பொதுமக்கள் #பாதுகாப்புஉத்தியோகத்தர் #மோதல் #ஊடகவியலாளர்களுக்கு #அச்சுறுத்தல் #கல்முனை   #அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை

பாறுக் ஷிஹான்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.