வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படத்தின் 2ஆம் பாகம் உருவாக உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான வடசென்னை திரைப்படம் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து இப்படத்தின் 2ஆம் பாகம் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்ததால், வடசென்னை படத்தின் 2ஆம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தனுஷ் ஒரு டுவீட்டை பதிவிட்டு ரசிகர்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:- “என் ரசிகர்களிடையே இந்தக் குழப்பம் ஏற்பட காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2ஆம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம், நன்றி, லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம் வடசென்னை படத்தின் 2ஆம் பாகம் உருவாகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். #வடசென்னை 2 #தனுஷ் #வெற்றிமாறன்

Spread the love
Add Comment