உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மோதலில் 76 பொதுமக்கள் பலி

ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் மாகாணத்தில் தலீபான்களின் நிலைகளை குறிவைத்து நள்ளிரவில் அரசபடைகள் நடத்திய வான்தாக்குதலின் போது குண்டுகள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் விழுந்ததில் பொது மக்கள் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அதே போன்று காந்தகார் மாகாணத்தில் இராணுவத்தினரை குறிவைத்து தலிபான்கள் ; நடத்திய தாக்குதலில சிக் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை அதே மாகாணத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து தலிபான்கள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கி, வெடித்ததில் 30 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவ்வாறு அரச படைகளின் வான்தாக்குதலிலும், தலிபான்கள் நடத்திய குண்டு வெடிப்பில் சிக்கியும் 24 மணி நேரத்தில் மட்டும் 76 பொதுமக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஆப்கானிஸ்தான் #மோதல் #பொதுமக்கள் #பலி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.