இலங்கை பிரதான செய்திகள்

மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடுமாறு உத்தரவு..


நாடு முழுவதும் உள்ள மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை 3 மாதத்திற்குள் மூடவேண்டும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 88 முக்கிய தொழிற்பேட்டைகளில் 2009-10-ம் ஆண்டில் ஆய்வு செய்தது. நிலத்தடிநீர், காற்று, அபாயகரமான கழிவுகளை வெளியேற்றுதல் ஆகியவைகளின் அடிப்படையில் எந்த அளவுக்கு மாசு ஏற்பட்டுள்ளது என ஒவ்வொரு பகுதியையும் வகைப்படுத்தியது. அதனடிப்படையில் மாசு ஏற்பட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளை ஆபத்தான மாசடைந்த பகுதி, தீவிரமான மாசடைந்த பகுதி, இதர மாசடைந்த பகுதி என 3 வகையாக பிரித்தது.

இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், கடந்த 5 ஆண்டுகளில் தொழிற்சாலைகள் ஏற்படுத்திய மாசுவை மறுசீரமைக்கவும், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட சேதத்துக்கான மதிப்பு ஆகியவற்றை அந்தந்த தொழிற்சாலைகளில் இருந்து இழப்பீடாக வாங்க வேண்டும் என உத்தரவிட்டார்.  அதோடு இதுபோன்ற தொழிற்சாலைகளை தடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல், ஆபத்தான மாசடைந்த பகுதி மற்றும் தீவிரமான மாசடைந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாதங்களுக்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்

நிபுணர்களுடன் சேர்ந்து இந்த உத்தரவை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றிய பின்னர் அதுதொடர்பான தகவலை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு 3 மாதங்களுக்கு பின்னர் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap