இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

அக்கர்ப்பத்தனையில் காணாமல் போன மாணவி, 300 அடி தூரத்திலிருந்து சடலமாக மீட்பு….

(க.கிஷாந்தன்)

அக்கர்ப்பத்தனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் நேற்று 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு மாணவி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்  மேலும், நீரினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றொரு மாணவியின் சடலம் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் சடலம் கொத்மலை நீர்தேகத்திற்கு நீரேந்தி செல்லும் டொரிங்கடன் தோட்ட கால்வாய் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 300 அடி தூரத்திலேயே குறித்த மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இம்மாணவிகள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் எனவும், உயிரிழந்தவர்களான மதியழகன் லக்ஷ்மி என்ற மாணவியின் சடலம் 18.07.2019 அன்று மாலை மீட்கப்பட்டு, அக்கர்ப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மற்றொரு மாணவியான மதியழகன் சங்கிதா 19.07.2019 அன்று காலை மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த இரு மாணவிகளின் சடலத்தையும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை அக்கரப்பத்தனை காவற்துறையினர்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.