பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கை இங்கிலாந்தின் பாதையை பின்பற்றவேண்டும்

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை கிரிக்கெட் அணியானது இங்கிலாந்து அணி பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கல்ப்நியுசிற்கு வழங்கியுள்ள தனது வாராந்த கட்டுரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட அவமானத்தின் பின்னர் இங்கிலாந்து அணி கடந்துவந்துள்ள பாதை எதிர்காலத்திற்காக திட்டமிட விரும்பும் எந்த அணிக்கும் சிறந்த ஒரு பாடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 உலக கிண்ணத்தை வெல்வதற்கு தாங்கள் விளையாடவேண்டிய விதத்தையும் அதற்கான வீரர்களையும் இங்கிலாந்து அணியினர் இனம்கண்டுகொண்டனர் எனத் தெரிவித்துள்ள குமார் சங்கக்கார இங்கிலாந்தின் வெற்றி மோர்கனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் வீரர்களிற்கு நம்பிக்கையை வழங்கினார் வீரர்கள் தங்களிற்கு உரிய பாணியில் விளையாட அனுமதி வழங்கினார் எனவும் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளதனால் சூழ்நிலைகள் ஆடுகளங்கள் எங்களிற்கு சாதகமாகயிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அணியிடம் திறமையுள்ளது எனவும் மிகவும் அவதானமாக திட்டமிட்டு முக்கிய குழுவை முன்னரே உருவாக்கவேண்டும் எனவும ;குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இலங்கை இங்கிலாந்தின் பாதையை பின்பற்றவேண்டும்#இலங்கை  #இங்கிலாந்தின் #பின்பற்றவேண்டும் #குமார் சங்கக்கார  #உலக கிண்ண

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.