Home இந்தியா சினிமா பாணியில் திட்டம் – 3 வயது குழந்தையை கடத்திய நபர் கைது…

சினிமா பாணியில் திட்டம் – 3 வயது குழந்தையை கடத்திய நபர் கைது…

by admin

திரைப்படம் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் சினிமா பாணியில் திட்டம் தீட்டி 3 வயது குழந்தையை கடத்திய நபரை சென்னை காவல்துறையினர் 8 மணி நேரத்தில் கண்டுபிடித்து குழந்தையையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ள 33 வயதான பட்டதாரியான முகமத் கலிமுல்லா என்பவர் சினிமா தயாரிக்க வேண்டும் என்பது நீண்டகால ஆசையை நிறைவேற்றுவதற்காக அவரது தோழியான அம்பிகா என்பவரின் உதவியுடன் அம்பிகா வேலை செய்யும் வீட்டில் வளரும் 3 வயது குழந்தையை கடத்தி குழந்தையின் பெற்றோரிடம் 60 லட்ச ரூபாய் தொகை கேட்டுள்ளனர்.

இதற்காக, கலிமுல்லா கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பல்வேறு இணைய தளங்களில், குழந்தை கடத்துவது எப்படி என்று ஆராய்ந்துள்ளார்.  எனினும் குழந்தை கடத்தப்பட்டு சிலமணி நேரங்களிலேயே சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் 8 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.

எனினும் குழந்தை கடத்தப்பட்டு சிலமணி நேரங்களிலேயே சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை 8 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ள காவல்துறையினர் குழந்தையை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More