பிரதான செய்திகள் விளையாட்டு

உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது


உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம் திகதி இங்கிலாந்தினல் லிவர்பூல் எரினா உள்ளக அரங்கில் ஆரம்பமாகியிருந்தது.

இந் நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் போட்டியிட்ட நிலையில் 52-51 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது
இதேவேளை பிளேஓப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து 58-42 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளது. #உலகக் கிண்ண  #வலைப்பந்தாட்ட #நியூஸிலாந்து #சம்பியன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.