உலகம் பிரதான செய்திகள்

ஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்

ஹொங்கொங் யாங் லாங் புகையிரத நிலையத்திற்குள் முகமூடி அணிந்து தடியுடன் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நேற்றிரவு இ;டம்பெற்ற இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் , அவர்கள் ஏன் மக்களை தாக்கினார்கள்? என தெரியவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் போரட்டம் முடிந்து திரும்பிய மக்கள் மற்றும் பயணிகள் மீதே இவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹொங்காங்கில் ஜனநாயகத்திற்கான போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது காவல்துறையினா கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது  #ஹொங்கொங் #புகையிரத #இனந்தெரியாதோர் #தாக்குதல் #முகமூடி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.