சினிமா பிரதான செய்திகள் விளையாட்டு

‘800’ படத்தில் முரளிதரனாக  விஜய் சேதுபதி!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவானான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டவுள்ளது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகன் விஜய் சேதுபதி முரளீதரனின் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

1992 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய முத்தையா முரளிதரன் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். தனது 19 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் அரங்கில் 534 விக்கெட்டுக்களையும், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்களையும் முரளிதரன் கைப்பற்றியுள்ளார்.

முரளிதரன் ஆடிய காலங்களில் இருந்த சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஸ்டீவ் வோக் உள்ளிட்ட பல துடுப்பாட்ட ஜாம்பவான்களை தனது சுழலில் மிரட்டியவர் முரளிதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார். இந்த சாதனையை இனிமேல் வேறு ஒரு பந்து வீச்சாளர் முறியடிப்பது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாத விடயம்.

இந் நிலையில், முரளிதரனின் அடையாளமாக திகழும் “800” என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாகவும் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.    #முரளிதரன் #விஜய் சேதுபதி #இலங்கை கிரிக்கெட் அணி #சச்சின் டெண்டுல்கர் #பிரயன் லாரா, 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.