பிரதான செய்திகள் விளையாட்டு

மலிங்காவின் ஓய்வு குறித்த அறிவிப்பு


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேசுக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனை உத்தியோகபூர்வமாக காணொளிப் பதிவொன்றினூடாக அறிவித்துள்ள அவர் தான் விளையாடும் இறுதி ஒருநாள் போட்டியை கண்டுகளிக்க இயலுமானால் ஆர்.பிரேமதாச மைதானத்திற்கு வருமாறும் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை மலிங்க எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெவுற்ற இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர் வரை இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #லசித் மலிங்கா   #பங்களாதேசுக்கெதிரான #ஒருநாள் போட்டி #ஓய்வு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.