இந்தியா பிரதான செய்திகள்

சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலிலுள்ள அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அறிவிப்பு


சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 19-ம் திகதி சென்று கொண்டிருந்த பிரித்தானிய எண்ணெய் கப்பலை தமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து ஈரான் கடற்படை சிறை பிடித்திருந்தது

சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் 18 இந்தியர்கள் உள்ளிட்ட 23 பணியாளர்கள் உள்ள நிலையில் இந்திய தூதரகத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி இந்தியர்களையும் மீட்கும் பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பாட்டுள்ளது  #சிறைப்பிடிக்கப்பட்ட  #கப்பலிலுள்ள #ஆரோக்கியத்துடன் #இந்தியர்கள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap