சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சொலமன் மிரே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற போட்டிகளின் பின்னர், தமது ஓய்வு குறித்து ஏனைய வீரர்களிடமும் அதிகாரிகளிடமும் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போதுள்ள நிலையில், ஓய்வு பெறுவதையிட்டு கவலையடைவதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சொலமன் மிரே சிம்பாப்வே அணிக்காக 47 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 9 இருபதுக்கு இருபது போட்டிகளிலும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #சொலமன் மிரே #கிரிக்கெட் ஓய்வு #Solomon Mire #சிம்பாப்வே
Spread the love
Add Comment