Home இந்தியா இந்தியா முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள்

இந்தியா முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள்

by admin


இந்தியா முழுவதும் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு பட்டியல் வெளியிட்டுள்ளது. உயர் கல்வி பயிலும் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் போலி பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து இவ்வாறு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதுச்சேரியில் செயல்பட்டுவரும் ஸ்ரீபோதி பல்கலைக்கழகம் உட்பட கர்நாடகம், கேரளம், டெல்லி என இந்தியாவில் 23 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளை மீறி அங்கீகாரமற்ற பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகின்றன. இப்போதைக்கு நாட்டில் 23 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இல்லாமல் பெயரளவுக்கு சுயமாக வடிவமைத்துக் கொண்டு போலியாக செயல்படுகின்றன. எனவே மாணவர்கள் இந்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார். #இந்தியா  #போலி பல்கலைக்கழகங்கள் #பல்கலைக்கழக மானியக் குழு

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.