இலங்கை பிரதான செய்திகள்

யாழ். பல்கலை – கிளிநொச்சி வளாகத்தில் மாணவர்களிடையே மோதல் – 9 பேர் காயம்…


யாழ்ப்பண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில் நுட்பபீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள பொறியியல்பீட வளாகத்தில் தொழில் நுட்பப்பிரிவின் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap