உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – மூவர் பலி


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கில்ராய் நகரில் ஆண்டுதோறும் பூண்டு பிரியர்கள் நடத்தும் உணவு திருவிழாவிலேயே இவ்வாறு துப்பாக்கிச்சூ: நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் மூன்றுநாள் திருவிழாவின் இறுதிநாளான நேற்று அங்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்த வேளை அங்கு நுழைந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ; 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயங்களுடன் 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #அமெரிக்கா  #துப்பாக்கிச் சூடு #பலி #கலிபோர்னியா

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.