Home இலங்கை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஜகத் நிஷாந்த சாட்சியமளிக்கவுள்ளார்

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஜகத் நிஷாந்த சாட்சியமளிக்கவுள்ளார்

by admin


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று வியாழக்கிழமை மீண்டும் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று பகல் வேளையிலேயே பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளதாகவும் இதன்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் பதில் பணிப்பாளரும் காவல்துறை அத்தியட்சகருமான ஜகத் நிஷாந்த சாட்சியங்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை நேற்றையதினம் இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோர் சாட்சியங்களை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  #பாராளுமன்ற #தெரிவுக்குழு #ஜகத் நிஷாந்த #சாட்சியமளிக்கவுள்ளார்#உயிர்த்த ஞாயிறு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More