இந்தியா பிரதான செய்திகள்

குஜராத்தில் கனமழை – விமானசேவைகள் நிறுத்தம்


குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வதோதரா விமான நிலையத்தில் விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற கனமழையினால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தும் பாதிப்பு அடைந்துள்ளது.

மேலும் புகையிரத நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதனால் 5 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அத்துடன் மாவட்டத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள இடங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது  #குஜராத் #கனமழை #விமானசேவைகள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.