பிரதான செய்திகள் விளையாட்டு

மெஸ்ஸிக்கு மூன்று மாதத் தடை


கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் போது  குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியுள்ள அர்ஜென்டின தேசிய கால்பந்து அணியின் தலைவர் லயனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால்பந்து தொடர்களில் பங்கேற்பதற்கு மூன்று மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த இந்த தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலியை வென்ற பின்னர் வழங்கிய பேட்டியில்  32 வயதாகும் மெஸ்ஸி, இந்த கிண்ணம் பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது என குற்றம் சுமத்தியிருந்ததனையடுத்து அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு 50,000 டொலர்கள் அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கழகம் விதித்துள்ளது. எனினும் இதனை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #லயனல் மெஸ்ஸி   #தடை #கோபா

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.