இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் திருகோணமலையில் இன்று முற்பகல் ஆரம்பமாகவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலை, ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தெரிவு சூடுபிடித்துள்ள நிலையில் இதன்போது, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அதிகம் கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்றும், திருகோணமலையில் இன்று மாலை 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add Comment