இந்தியா பிரதான செய்திகள்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை


காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததனையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள பாதுகாப்பு பலப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை குழுவுடன் இணைந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 15 பேர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றதாகவும் இதன்போது ஏற்பட்ட மோதலில்; 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை அணியை சேர்ந்த சில வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர் எனவும் அவர்களுடன் சேர்த்து 7 பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப்பகுதியில் கடந்த 36 மணி நேரத்தை தாண்டியும் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  #இந்திய எல்லை  # ஊடுருவ  #பாகிஸ்தான் #சுட்டுக்கொலை

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.