பிரதான செய்திகள் விளையாட்டு

மேற்கிந்திய தீவுகள்அணிக்கெதிரான தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது


மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுத்தது.  மேற்கிந்திய தீவுகள்அணியின் சார்பில் ஒஷானே தோமஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும்ம், கீமோ போல் 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 168 என்ற வெற்றியிலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது எனினும் 15வது ஓவரில் மோசமான வானிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டநிலையில் இந்திய அணி டக்வர்த் லீவிஸ் முறைப்படி 22 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருப்துக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது #மேற்கிந்திய தீவுகள்  #இந்தியா #கைப்பற்றியுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.