உலகம்

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி


இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் போட்டியிடும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா அணி 251 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா அணி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.

கடந்த 1 ஆம் திகதி பேர்மிங்ஹாம்- எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 374 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை தொடர்ந்து 90 ஓட்டங்கள் பின்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்ரேலியா அணி 487 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இந்த நிலையில் தொடர்ந்து 398 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதனையடுத்து அவுஸ்ரேலியா அணி 251 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. #ஆஷஸ் #போட்டி #அவுஸ்ரேலியா #வெற்றி #இங்கிலாந்து

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap