உலகம் பிரதான செய்திகள்

கொங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 11 பேர் பலி – 50 பேரை காணவில்லை


கொங்கோ நாட்டில் ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 50 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் ஹாசி பகுதியில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி லுகேனே ஆற்றில் 77 பேருடன் பயணித்த படகு பாரம் கொண்ட சரக்குகளையும் ஏற்றி சென்ற நிலையில் பாரம் தாங்காமல் திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையடுத்து ஆற்றின் சிக்கி தவித்த 16 பேர் நீச்சல் அடித்து கரையை அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட போதும் நீரில் மூழ்கி 11 பேர் உயிரிழந்தனர்.மேலும், 50 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.  #கொங்கோ  #படகு #விபத்து #காணவில்லை #congo

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.