உலகம் பிரதான செய்திகள்

வட கொரியா அணுஆயுத திட்டங்களுக்கான நிதியை இணைய திருட்டு மூலம் பெற்றுள்ளது


தனது அணுஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக வடகொரியா இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் டொலர்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களை வடகொரியா திருடியுள்ளதாகவும் இதுதொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதாகவும அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் தனது நான்காவது ஏவுகணை சோதனையை நேற்று செவ்வாய்க்கிழமை வடகொரியா மேற்கொண்டிருந்தது

தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவ பயிற்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  வட கொரியா அணுஆயுத திட்டங்களுக்கான நிதியை இணைய திருட்டு மூலம் பெற்றுள்ளது #வட கொரியா #அணுஆயுத #நிதி #இணைய திருட்டு #ஐக்கிய நாடுகள் சபை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.