சினிமா பிரதான செய்திகள்

தீக்குளித்து நிரூபிப்பேன் – பார்த்திபன்


‘தீக்குளித்து நிரூபிப்பேன். அணைக்க மட்டும் ரசிகர்கள் போதும்’ என ஒத்த செருப்பு படம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கி – நடித்துள்ள படம், ஒத்த செருப்பு. இந்தப் படம் முழுவதிலும் பார்த்திபன் மட்டுமே ஒரே கதாபாத்திரமாகத் தோன்றவுள்ளார்.

அண்மையில் ஒத்த செருப்பு திரைப்படம் சிங்கப்பூர் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ள நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் தோன்றுவதாலும், பரீட்சார்த்த முயற்சி போல தோன்றும் இதன் டிரெய்லரினாலும், படத்துக்கு வணிக ரீதியான வரவேற்பு எப்படி இருக்கும் என்ற பேச்சுவார்த்தை எழுந்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அதில் தான் தன்னையும் ரசிகர்களையும் தான் நம்புவதாகவும் ; சினிமா வியாபாரம் ‘ஒத்த செருப்பு’ போன்ற புத்தம் புதிய முயற்சிகளை (நியாயமான) சந்தேகப் பார்வையுடனே பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் தீக்குளித்து நிரூபிப்பேன் அணைக்க மட்டும் ரசிகர்கள் போதும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.  #தீக்குளித்து  #பார்த்திபன் #ஒத்த செருப்பு.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap