சினிமா பிரதான செய்திகள்

மாதவனுடன் இணையும் சூர்யா


மாதவன் முதன்முறையாக இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி நம்பி விளைவு என்னும் படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்றிய விஞ்ஞாணி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் நம்பி நாராயணனாக நடிக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மாதவனும், சூர்யாவும் இணைந்து நடித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்குப் பின்னர் இந்தப் படத்தில் சிம்ரன் , மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரம் தனது கதையை சூர்யாவிடம் கூறுவது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து பிளாஷ் பேக் காட்சிகள் விரிவதாக உருவாகிறது.ட்ரை கலர் பிலிம்ஸ், விஜய் மூலன் டாக்கீஸ், சப்ரான் கணேஷா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்ற இந்தப்படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது . #மாதவன்   #சூர்யா #ராக்கெட்ரி நம்பி விளைவு #சிம்ரன்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.