ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும்வரை இலங்கையுடனான சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அண்மையில் சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். இதன்போதே, அமெரிக்கா- இலங்கைக்கு இடையிலான சோபா உடன்பாட்டு தொடர்பான பேச்சை இடைநிறுத்துவது குறித்த நிலைப்பாட்டை, அமெரிக்கா சார்பில் தூதுவர் வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, சோபா உடன்படிக்கை தொடர்பாக தற்போது இலங்கையில் சமகால அரசியல் களத்தில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றமையால், ஜனாதிபதித் தேர்தல்வரை இதுதொடர்பாக எவ்விதப் பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா ஈடுபடாது என அவர் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டதென்றும் மேலும், சோபா உடன்படிக்கை குறித்து விவாதிப்பதற்கான இலங்கையின் உரிமையை தாங்கள் மதிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Add Comment