மாதாந்தம் 30 அலகுகளுக்கு உட்பட்டு மின் பாவனையைக் கொண்ட குடும்பங்களுக்கு இலங்கை மின்சார சபையினால் மிகக்குறைந்தவோல்ட் மின்குமிழ்கள் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பான மின்சார சபையில் பிரதம அலுவலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாதாந்தம் 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தலா 2 மின்குமிழ்கள் வீதம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த திட்டமானது நாடு பூராகவும் இடம்பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் குறித்த மின்குமிழ்கள் வழங்கிவைக்கப்பட்டன யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 2 ஆயிரத்து 338 குடும்பங்கள் 30 அலகுகளுக்கு உட்பட்டு மாதாந்தம் மின்சாரத்தை பயன்படுத்துவதாக யாழ்ப்பாண மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் தெரிவித்தார்.
Mayurappriyan
Spread the love
Add Comment