இலங்கை பிரதான செய்திகள்

பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…

பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா

அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை, பயங்கரவாத அமைப்புக்களின் தடைக்கு இடையூறாக அமையாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம் மற்றும் விலயான் அல் செயிலானி போன்ற 3 அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை அவசரகால சட்டத்தின் கீழ் அல்ல என்றும், இவை 1979 ஆம் ஆண்டு இலக்கம் 48 இன் கீழான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 27 ஆவது சரத்தின் கீழாகும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு அமைவாக அவசரகால சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த 3 அமைப்புக்கள் மீதான தடை நீங்குவதாக பரப்பப்படும் வதந்தி அடிப்படை அற்றதாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு தடையாக அமையாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவசரகால சட்டம் நீடிக்கப்படாமையினால், தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்குவதாக வெளியான செய்தியை அவர் முற்றாக நிராகரித்தார். வாராந்த பத்திரிகையொன்றில் இது தொடர்பாக வெளியாகியிருந்த செய்தி தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 200 பேர் அவசரகால சட்டம் நீக்கப்பட்டதுடன் விடுவிக்கப்படுவதாக வெளியான செய்தியை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முற்றாக நிராகரித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் அவசரகால நட்ட நடவடிக்கையின் கீழ் தடுத்து வைக்கப்படவில்லை. இவர்கள் பயங்கரவாதத்தை தடுக்கும் தற்காலிக ஒழுங்குவிதி சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, புத்தளத்தில் இருந்து அறுவக்காலு வரையில் கழிவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி புத்தளத்தின் தில்லடி என்ற இடத்தில் கல்லால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்

அவசரகால சட்டத்தை நாட்டில் நீக்கிய போதிலும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொம்பே பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ருவன் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்களில் தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்பு அற்றவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.