இலங்கை பிரதான செய்திகள்

மீனவரின் வலையில் சிக்கிய 81 மி . மீற்றர் ரக குண்டுகள்

அம்பாறை மாவட்டம் பொத்துவில் களப்புக்கட்டு பகுதியில்  மீனவரின்   வலையில்   81 மி . மீட்டர் ரக   மோட்டார் செல்  குண்டுகள் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை(25)மாலை அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில் குறித்த மோட்டார்  குண்டுகள் சிக்கியுள்ளன .
கருப்பு நிற பொலித்தீன் பை ஒன்றில் சுற்றி கட்டப்பட்டிருத்த நிலையில் குறித்த 3 குண்டுகளும் மீட்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பாக  காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.   #அம்பாறை #மீனவரின் #வலை #குண்டுகள்
பாறுக் ஷிஹான்
 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.