உலகம் பிரதான செய்திகள்

மொராக்கோவில் கனமழை 7 பேர் உயிரிழப்பு…

மொராக்கோவில் தெற்கு பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மொராக்கோவின் தரவ்டன்ட் மாகாணத்தின் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதனால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் திசர்ட் கிராமத்தின் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வறண்டு கிடந்த ஆற்றின் அருகே கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளம் வந்ததால் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஒருவரைக் காணவில்லை என தெரிலவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.