முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ பெயரிடப்பட்டுள்ளார். இவர் இந்தக் கட்சியின் பிரசார செயலாளராக செயற்படுகின்றார். முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சில இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் சார்பாக 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ களமிறங்கினார்.
2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராகவும் துமிந்த நாகமுவ செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comment