இலங்கை பிரதான செய்திகள்

ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என்பதால் வன்மையாகக் கண்டிக்கின்றோம் – சுதந்திர ஊடக இயக்கம்

ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

விசேடமாக தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெறும் சந்தர்ப்பமொன்றில், இவ்வாறான செயற்பாடு நிலைமையை மிக மோசமாக்கும். அதேபோன்று, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதிக்கான அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதில்லை என உறுதிமொழியளித்து பதவியேற்ற நல்லாட்சி ஜனாதிபதியொருவரின் கீழ் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் மிகவும் வருத்தமடைகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் வேண்டியதோர் விடயத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதற்கு உள்ள உரிமையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக விளங்கும் இந்த தீர்மானம், தற்போதைய அரசியல் சூழ்நிலையோடு வைத்து நோக்கப்பட வேண்டுமென்று சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், வெகுசன ஊடகங்கள் சமூகப் பொறுப்புமிக்க விதத்தில் செயற்படுவதை உறுதி செய்வது தேர்தல் ஆணையாளருக்கு உள்ள விசேட பொறுப்பு என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள ஒரு விடயம் அத்தகைய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டதா? என்பது கேட்கப்பட வேண்டிய சட்டப் பிரச்சினையாகும். அதேசமயம் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சியும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவுள்ளதாக தற்போதளவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பவும் ஜனாதிபதியின் பொறுப்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டுவருவது விவாதத்திற்குரியதாகும்.

எந்தவொரு தேர்தலும் நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றாக அமைவது வாக்காளர்களுக்கு சுயாதீனமாக தீர்மானமொன்று மேற்கொள்வதற்குத் தேவையான தகவல்கள் பக்கச்சார்பின்றி வழங்கும் ஊடக பயன்பாட்டிலாகும் என்பது சுதந்திர ஊடக இயக்கத்தின் நிலைப்பாடாகும். ஜனாதிபதியவர்கள் மேற்கொண்ட தீர்மானம் அந்த உரிமையை மீறுவதாக அமைகின்றது. அதன் காரணமாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக இரத்துச் செய்து, நீதி மற்றும் சுதந்திரமான தேர்தலொன்றை நடத்துவதற்கு உறுதியளிக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கின்றது. #ரூபவாஹினி #சுதந்திரஊடகஇயக்கம்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.